விருதுநகர் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து மிக அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். “டெல்லியில் உள்ள காமராஜரின் வீட்டிலேயே வைத்து அவரை கொலை செய்ய ‘சங்கிக் கூட்டம்’ முயன்றது” என அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜரின் புகழைச் சிதைக்க நினைக்கும் சக்திகளுக்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அவர் ஆக்ரோஷமாகப் பேசினார். மேலும், காமராஜர் மறைந்தபோது அவருக்கு மெரினாவில் இடம் கொடுக்க திமுக மறுத்துவிட்டதாக அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறிவரும் புகார்களுக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
“காமராஜர் மறைவின் போது அவரது மகன் போலவே அருகில் நின்று இறுதி மரியாதை செலுத்தியவர் கலைஞர் கருணாநிதி” என்று சுட்டிக்காட்டிய அவர், காமராஜருக்கும் திமுகவுக்கும் இடையிலான பிணைப்பை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காமராஜரைச் சுற்றியுள்ள இந்த அரசியல் மோதல் தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
