டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாகத் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தச் சிலையைத் திறந்து வைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைக்காமலேயே திடீரென டெல்லியிலிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

முதலமைச்சரின் இந்தத் திடீர் முடிவால், டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழ்த் துறை மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடுமையான ஏமாற்றமும், பெரும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.