சத்தீஷ்கர் மாநிலம் துர்க் நகரில், பூஜா மற்றும் திலக் சாகு என்ற காதல் ஜோடி குடும்ப அனுமதியின்றி காதலித்து வந்தனர். இருவரின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்கள் ஒப்புதல் இல்லாமல் கோவிலில் திருமணம் செய்தனர்.
இதனை தெரிந்து கொண்ட இரு குடும்பத்தினரும் கடும் கோபத்தில் இருந்தனர். அப்போது பூஜாவின் உறவினரும், நீரஜ் தாக்குர் சமரசம் செய்ய வந்தார். “நடந்தது நடந்து விட்டது, அமைதியாக இருங்கள், பதற்றமடைய வேண்டாம்” என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் திலக்கின் உறவினர்கள் ஆத்திரமடைந்து, கர்ப்பிணி மனைவியின் முன்னால் நீரஜை கம்புகள் மற்றும் கத்திகளால் தாக்கினர். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும்வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதோடு, சம்பந்தப்பட்ட 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
