சமூக ஊடகங்களில் தற்போது ஒரு இளம் பெண்ணின் வீடியோ இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் கிடைக்கும் தண்டனை இதுதான்” என்று கூறியபடி, அந்தப் பெண் தான் வசிக்கும் ஒரு எளிய, சிதிலமடைந்த அறையைக் காட்டுகிறார். செங்கற்களால் ஆன சுவர்கள் இருந்தாலும், அதன் கூரை மரக்கட்டைகளால் தற்காலிகமாக மூடப்பட்டு, எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.

மேலும் கேமராவிற்குப் பின்னால் இருந்து பேசும் அவரது கணவர், இந்தக் கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்று கூற, அதற்கு அந்தப் பெண், “காதலுக்காக இவ்வளவு பெரிய ஆபத்தை எடுத்த பிறகு வேறு என்ன செய்ய முடியும்? இப்போது பெற்றோர் வீட்டிற்கும் திரும்பிப் போக முடியாது, அங்கு போனால் அடித்து விரட்டிவிடுவார்கள்” என்று மிகவும் சோகத்துடன் தனது நிலையை விவரிக்கிறார்.

“>

இதனால் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இது இணையவாசிகளை இரண்டு பிரிவாகப் பிரித்துள்ளது. ஒரு தரப்பினர், “காதல் என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும்” என்றும், “பெற்றோரை எதிர்த்துச் சென்றால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மற்றொரு தரப்பினரோ, இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், ரீல்ஸ் செய்வதற்காகவும் இதுபோன்று போலியான வீடியோக்களை உருவாக்குவது வழக்கம் என்பதால், இது வெறும் நாடகம் மட்டுமே என்று வாதிடுகின்றனர். இந்த வீடியோ உண்மையானதா அல்லது வெறும் சமூக ஊடக விளம்பரமா என்ற விவாதம் இணையத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.