சமூக ஊடகங்களில் லைக்குகளையும் பார்வைகளையும் பெறுவதற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிவது தற்காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்குச் சான்றாக, வியட்நாமிற்கு சுற்றுலா சென்ற இந்தியப் பெண் ஒருவர் அங்கேயுள்ள ஒரு பரபரப்பான இரவுச் சந்தையில் வெறும் வெள்ளை நிறத் துண்டை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு, பாலிவுட் என்ற பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடியுள்ளார்.

மேலும் அங்கு திரண்டிருந்த உள்ளூர் மக்களையும் பிற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த நடன வீடியோ, தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

“>

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். வெறும் சில லைக்குகளுக்காக வெளிநாடு சென்று நமது நாட்டின் கலாச்சாரத்தையும் கண்ணியத்தையும் சீரழித்து, இந்தியாவின் மதிப்பை உலகளவில் கெடுப்பதாகப் பலரும் சாடியுள்ளனர்.

இந்நிலையில் ஒரு சிலர் இது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் என்று அவருக்கு ஆதரவாகப் பேசினாலும், பெரும்பாலானோர் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சமூகப் பொறுப்பு இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றே தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.