சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஓடும் இருசக்கர வாகனத்தில் காதலர்கள் செய்த ஆபத்தான சாகசம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலை 30-ல் வாலிபர் ஒருவர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல, இளம்பெண் ஒருவர் அவருக்கு நேர் எதிரே பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கட்டிப்பிடித்தபடி ரொமான்ஸ் செய்துள்ளார்.

மேலும் சாலை விதிகளை முற்றிலுமாக மீறி, சக பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்த இந்த வீடியோவை, பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“>

இந்தச் சம்பவம் சரமா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாலிபர் மற்றும் இளம்பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசார், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.