பதாவுன் மாவட்டத்தில் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தின் பின்னணி இதோ:
கேஸ் ஏஜென்சிக்கு ஆவணங்கள் தயார் செய்ய வேண்டும் என்று பொய் கூறி, தனது மனைவியை கணவன் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
வழியிலேயே பப்பு மற்றும் பாலகிஷன் என்ற இருவர் தயாராக நின்றிருந்தனர். மனைவி எதிரிலேயே அவர்களிடம் 1000 ரூபாய் வாங்கிய கணவன், “எனக்கு வேலை இருக்கிறது, நீங்கள் இவர்களுடன் பைக்கில் சென்று வேலையை முடியுங்கள்” என மனைவியை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த இருவரும் அந்தப் பெண்ணை கேஸ் ஏஜென்சிக்கு அழைத்துச் செல்லாமல், அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அங்கிருந்து தப்பித்து வந்து கணவனிடம் முறையிட்டபோது, “இனி உன்னை வைத்துத்தான் பணம் சம்பாதிக்கப் போகிறேன்” என அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து மயங்கும் அளவுக்குப் பதிலளித்துள்ளார்.
