மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஒரு பெண்ணை ஒருதலைப்பட்சமாகக் காதலித்த வாலிபர் செய்த வினோதமான செயல் அங்கிருப்பவர்களை உறைய வைத்துள்ளது.
அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் காயப்போடப்பட்டிருந்த உள்ளாடைகளைத் தொடர்ந்து திருடி வந்த அந்த வாலிபர், அந்தப் பெண்ணின் பெயரைத் தனது நெஞ்சில் பச்சையாகக் குத்திக்கொண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த நபர் பிடிபட்டார். விசாரணையில், “நான் அந்தப் பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன்,
அதனால்தான் இப்படிச் செய்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்தது போலீசாரையே அதிர வைத்தது. பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் செயல்பட்ட அந்த ‘சைக்கோ’ வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
