மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கள்ளக்காதலனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் செப்டிக் டேங்கில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான அந்த நபர், வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார்.
மேலும் சமீபத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் தகராறு காரணமாக, ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கொலையை மறைப்பதற்காகத் திட்டமிட்ட அவர், உடலைத் தனது வீட்டு வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கிற்குள் வீசி மறைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து செப்டிக் டேங்கில் இருந்து பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர். சடலம் அழுகிய நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருந்த அந்த நபரைத் தேடி வந்த நிலையில் தற்போது அவரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குடும்ப உறவுகளைத் தாண்டிய இத்தகைய உறவுகளும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் போபால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
