உலகம் முழுவதும் வருடந்தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை காதலர்கள் ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கூகுளில் புதிய டுடுல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரபலங்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய தினங்களை நினைவு கூறும் வகையில் கூகுள் சிறப்பு டுடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் புதிய டுடுலை வெளியிட்டுள்ளது.