நியூசிலாந்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்றும் மழை மற்றும் காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் கீரன் மெக்அனுல்டி தெரிவித்துள்ளார்.

இதனிடையில் புயலை அடுத்து ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களிலும் பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.