காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை என கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இன்று காவேரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரையானது வழங்கப்பட்டிருந்தது. அதில் நவம்பர் 1ஆம்  தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு கர்நாடக அரசு 2600 கன அடி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரை வழங்கியிருந்தார்கள். இந்த பரிந்துரையை அடுத்து தான் தற்போது கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே சிவகுமார்  அறிக்கையாக கூறி இருக்கின்றார்.

அதில் தமிழகத்திற்கு மேலும் காவிரியில் இருந்து நீர் கொடுப்பது இயலாத காரியம் என்பதை அவர் மீண்டும் திட்டவட்டமாக  கூறி இருக்கின்றார்.கபினி,  கிருஷ்ணராய சாகர் அணைகளில் இருக்கும் நீர் தங்களுக்கே போதுமானதாக இல்லை எனவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.