ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் Y.S ஷர்மிளாவோடு கூட்டணி தொடர்பாக திருமாவளவன் ஆலோசித்தார். மக்களவைத் தேர்தலில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. தமிழகத்தில் திமுக உடனும், கேரளா மற்றும் கர்நாடகாவில் தனித்தும் தேர்தலை சந்திக்கிறது. தெலுங்கானாவை பொருத்தவரையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திருமாவளவன் முயன்று வருகிறார்.