வாகன ஓட்டுனர்களுக்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இது இ-சேவை மையத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மார்ச் 13ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்த சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.