விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருக்கும் கழிவறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த போது 250 கிராம் எடையுள்ள குறைமாத ஆண் குழந்தையின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி குழந்தையின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.