தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருவது டிடிவி தினகரனுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது நீடாமங்கலம் அமமுக ஒன்றிய செயலாளர் தனபால் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்ட இவர்கள், வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் தீவிரமாகப் பாடுபடுவோம் என்று உறுதி அளித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் நடக்கும் இந்தத் திடீர் கட்சித் தாவல் அமமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
