முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான இன்று (பிப்.24), ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் மேடை முகப்பில் ‘களம் காண்போம், அம்மாவின் ஆட்சி அமைப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

​குறிப்பாக, இக்கூட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கொடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக கொடியில் இருப்பது போன்ற கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்கள் இருந்தாலும், அதில் அறிஞர் அண்ணாவின் உருவம் இடம்பெறவில்லை. அண்ணா படம் இல்லாமல் புதிய பாணியில் கொடியை அறிமுகப்படுத்தி, சசிகலா தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை இன்று தொடங்கியுள்ளார். இது அதிமுக மற்றும் அமமுக என இரு தரப்புக்கும் ஒரு புதிய அரசியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.