தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையின அந்தஸ்து சான்றிதழை இளைய வழியில் விண்ணப்பித்து பெறுவதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி www.minoritystatus.tn.gov.in என்ற இணையதளத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்துள்ளார். இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் எளிய முறையிலும் வெளிப்படை தன்மையுடனும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.