சமூக வலைதளங்களில் தற்போது உருசியத் திருமண விழா ஒன்றின் வீடியோ வைரலாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொதுவாகத் திருமணங்கள் முடிந்த மறுநாள் காலையில் விருந்தினர்கள் சோர்வாக உறங்குவது வழக்கம். ஆனால், இந்த வீடியோவில் மணமகளின் தோழிகள் மற்றும் உறவினர்களாகக் கருதப்படும் சில பெண்கள், காலையில் உறங்கிக் கொண்டிருக்கும் விருந்தினர்களை எழுப்ப மிகவும் வினோதமான முறையைக் கையாள்கின்றனர்.

மேலும் அவர்கள் கையில் மதுப் பாட்டில்களை வைத்துக்கொண்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் விருந்தினர்களின் வாயில் நேரடியாக மதுவை ஊற்றி அவர்களை அதிரடியாக எழுப்புகின்றனர். இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், இணையவாசிகளிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

“>

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் கண்ட பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் இதை ஒரு கலாச்சாரச் சடங்கு அல்லது வேடிக்கையான விளையாட்டு என்று குறிப்பிட்டாலும், பலரும் இது “மிகவும் மட்டமான செயல்” என்று விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் “ஒருவரை அவர் அனுமதியின்றி உறக்கத்தில் இருக்கும்போது இப்படிச் செய்வது முறையல்ல” என்றும், “திருமணக் கொண்டாட்டம் என்ற பெயரில் இவ்வளவு அநாகரீகமாக நடந்துகொள்ளக் கூடாது” என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில், உருசியாவின் சில பகுதிகளில் இது போன்ற வழக்கத்திற்கு மாறான கொண்டாட்டங்கள் இயல்பானவை என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். எது எப்படியோ, இந்த வினோத திருமண வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.