கோவாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அணுகுமுறை குறித்து அந்த ஊர் ஹோட்டல் ஊழியர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு பயணிகளில் யாரை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

மேலும் “டெல்லி வாசிகள் வேண்டாம்” என்று அந்த ஊழியர் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார். டெல்லி சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் முரட்டுத்தனமாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக, மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வருபவர்கள் மிகவும் கண்ணியமாகவும், பண்பாகவும் நடந்துகொள்வதாக அந்த ஊழியர் பாராட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Captain Goa / Hanumant Naik (@captain_goa)

“>

இதனால் அவர்கள் சேவைத் துறையில் இருப்பவர்களுக்கு உரிய மரியாதையைத் தருவதாகவும், தரமான முறையில் நடந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரல் வீடியோ, ஒருவரிடம் இருக்கும் பணத்தை விட, அவர் மற்றவர்களை நடத்தும் விதமே அவரது குணத்தை வெளிப்படுத்தும் என்பதை உணர்த்துவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.