விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் வீட்டில் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் . இந்நிலையில் 6 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தநிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 7 கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் போட்டியாளர் விபரங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிவருகிறது . அந்தவகையில்  தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவருக்கு விரைவில் திருமணம் ஆக உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது உண்மையா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.