சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே கிளாதாரி கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முத்து கருப்பி என்ற பெண் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் முத்துக் கருப்பி கடந்த ஒரு வருடமாக கூலி வேலை செய்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை சேர்த்து வைத்திருந்தார்.
இந்த பணத்தை வீட்டில் ஒரு இரும்பு பெட்டியில் வைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த நிலையில் தற்போது அந்த பணத்தை முழுவதும் கரையான் அரித்துள்ளது. தன்னுடைய மகளின் காதணி விழாவிற்காக இந்த பணத்தை அவர் சிறிது சிறிதாக சேர்த்த நிலையில் தற்போது பணம் முழுவதையும் கரையான் அளித்ததால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகிறார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் இருப்பவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
