ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணி சவிதா பென் அம்பேத்கர் கலப்பு திருமண திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த தொகையை ராஜஸ்தான் முதல்வர் உயர்த்தி இருப்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதாவது கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் எட்டு வருடங்களுக்கு 5 லட்சம் நிலையான வாய்ப்புத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை புதுமண தம்பதிகளுக்கான கூட்டு வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.