குஜராத்தின் கர்பா நடனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நவராத்திரி விழாவின்போது இரவு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்களால் ஆடப்படும் கர்பா நடனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்க கோரி யுனெஸ்கோவுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று கர்பா நடனத்தை கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்