இந்தியாவில் இறுதியாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் மொத்தம் 4.8 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இவர்களின் கல்வியறிவு விகிதம் 56.1 சதவீதமாக இருந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டு திருநங்கைகள் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களாக அறிவிக்கப்பட்டனர்.

அதனால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சமமான கல்வி உரிமையை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என மாநிலம் மற்றும் தேசிய கல்வி வாரியங்களை மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் திருநங்கைகளின் கல்விக்கான முழு கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் தங்கள் தரப்பிலிருந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் தன் சார்ந்த கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன.