அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கரூர் நிகழ்வில் நடிகர் விஜய் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டியது இருந்ததென கருத்து தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை கூறினார்.

“கரூர் சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக இல்லையெனினும், நிகழ்வுக்கான தார்மீகப் பொறுப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு உள்ளது,” என்றார் டிடிவி தினகரன். “விஜய் தார்மீகப் பொறுப்பு ஏற்றிருந்தால், நீதிமன்றம் கூட இவ்வளவு கண்டனம் தெரிவித்து இருக்காது என்று நான் நினைக்கிறேன்.”

இத்தனை நாட்களாக கரூர் சம்பவத்தில் அரசியல் செயல் நடைபெறுவதாகவும், அதனை மக்கள் கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். “உணர்ச்சிவசப்படும் சீமான் கூட நிதானமாக நடந்துகொள்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல் பதவிவெறியுடன் பேசுகிறார். அவரது நடவடிக்கைகள் அநாகரிகமாகவே உள்ளன,” என்று விமர்சித்தார்.

“கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள், கூட்ட நெரிசலால் ஏற்பட்டவை. திட்டமிட்ட சதி எதுவும் இல்லை. தவெகவிற்கு அரசியல் அனுபவக் குறைபாடே காரணம்,” என்றும், “இந்த விஷயத்தில் பாஜகவும் அதிமுகவுடன் சேர்ந்து அரசியல் செய்பவது வருத்தமளிக்கிறது,”

“விஜய்யை மத ரீதியாக விமர்சிப்பது தவறு. அது எச். ராஜாவின் பார்வைக்கோளாறு. அவர் ‘ஜோசப் விஜய்’ என்பதற்காக விமர்சிக்கப்படக்கூடாது. தமிழ்நாட்டினர் சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் ஏற்கும் தன்மை கொண்டவர்கள்,” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் சம்பவத்தில் நிதானமாக செயல்பட்டதாகவும், அவர் யாரையும் கைது செய்ய எண்ணவில்லை. “இனி இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதிருக்க போலீசும், கட்சிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல் எந்த ஒரு கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் சொந்த மக்களும் இறப்பதை விரும்ப மாட்டார்கள்.

மேலும் தவெகவின் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட வாதங்கள் பொறுப்பற்றவையாக இருந்ததாகவும், அதனால் தான் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். தவெகவினர் இனி துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்றும், நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பொறுப்பற்றதாகவும் கூறினார்.