தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கரூரில் திமுக மற்றும் அதிமுக இடையே கட்சித் தாவல் விவகாரம் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த ஒரு குழுவினர், இன்று மீண்டும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்குத் திரும்பியது செந்தில் பாலாஜி தரப்பிற்குப் பின்னடைவாகவும், பெரும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. கரூரில் செந்தில் பாலாஜி மற்றும் விஜயபாஸ்கர் இடையே நிலவும் அரசியல் போட்டி, தற்போது இந்தத் தொடர் கட்சித் தாவல்கள் மூலம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.