கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுக்கள் கருணாநிதியின் பன்முகத் தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமின்றி, பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் விழாக்களாக அமையவேண்டும் என்பதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டு, அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.