கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கௌதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கம்பீர் தலைமையில் கடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு வென்றது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சிளாக கம்பீர் நியமிக்கப்பட்டதால் கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் அடுத்த பயிற்சிளாக யாரை நியமிப்பார் என்று எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. த
ற்போது கொல்கத்தா அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தலைசிறந்த ஆல்ரவுண்டரான ஜாக் ஹாலீஸ் கேகேஆர் அணியின் புதிய தலைமை பேச்சாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அதே சமயத்தில் டெல்லி அணியில் இருந்து வெளியேறிய ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர்களில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா அணி ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
