தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு அளித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் தங்களின் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்புகளுக்குப் பின் இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட ஆவலுடன் மனு தாக்கல் செய்திருந்த நிர்வாகிகளுக்குத் தங்களின் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை வழங்கி அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.