தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முன்வைத்துள்ள மிகக் கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஒன்றும் தூய்மையானவர் அல்ல என்றும், சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை விட பெரிய வாய்ப்பு அரசியலில் இருப்பதால்தான் அவர் இங்கு வருகிறார் என்றும் ஜேம்ஸ் வசந்தன் ஓப்பனாக பேசியுள்ளார்.
மேலும், விஜய்யின் உடல் மொழி மற்றும் கண்களைப் பார்த்தாலே அவர் ஒரு “ஏமாற்றுக்காரர், பித்தலாட்டக்காரர்” என்பது தனக்குத் தெரிவதாகவும், அவரை நம்பி நிலம், வீடுகளை விற்றுத் தேர்தலில் நிற்கும் ரசிகர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த ‘வெறித்தனமான’ பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதால், தமிழக அரசியலில் இந்த விவாதம் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
