வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்கக்கூடும். இதன் காரணமாக இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு சுமார் 55 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீச கூடும். அதேபோல் தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் கூறப்பட்டுள்ளதாவது, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் வ.உ.சி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்திலும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.