கன்னி ராசி அன்பர்களே,

இன்று நீங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உங்கள் செயலில் திறமை வெளிப்படும். சிலர் சொல்லுகின்ற அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கும். முக்கிய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரக்கூடும்.

கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். அளவான பணம் வரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனக்கவலை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். இன்று பெண்களுக்கு நன்மை நடக்கக்கூடும்.

நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும். மனதிற்கு பிடித்தவர்களை கரம் பிடிப்பீர்கள். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கல்வியில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். சக நண்பர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்