சிம்ம ராசி அன்பர்களே,

இன்றைய எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். சந்திராஷ்டமம், முடியாததால் செயல்களில் கவனமாக இருங்கள். திறமை கொண்டு தான் இன்று வெற்றி பெறும் சூழல் உள்ளது. அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்க சில காலம் ஆகும். பொறுமையாக இருங்கள். சந்திராஷ்டமம் முடியும் வரை பொறுமை காப்பது நல்லது. பெண்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். முன்கோபம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எதிலும் சிந்தித்து செயலாற்றுங்கள். இன்று மாணவர்கள் தனிமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். எதையாவது யோசித்துக் கொண்டிருப்பீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வது நல்லது. இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்