கடக ராசி அன்பர்களே,

இன்று எதற்கும் நீங்கள் அச்சப்பட வேண்டாம். செய்யும் பணியை சரியாக செய்யுங்கள். வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. யாரையும் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.

கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனம் தளராமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவுகளிடம் சஞ்சலங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

இன்று பெண்கள் முன்கோபத்தை கைவிட வேண்டும். எதையும் சிந்தித்து செயலாற்றுங்கள். ஆசைகள் கனவுகள் இன்று பூர்த்தியாகும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க பாருங்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்