மிதுன ராசி அன்பர்களே,

இந்த நாள் மாறுபட்ட சூழல் ஏற்படும். சில விஷயங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டி இருக்கும். நிதானமான செயல்பாடுகள் மட்டுமே வெற்றி கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து எந்த செயலையும் செய்யுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கருத்துகளுக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். தைரியமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும்.

இந்த நாள் இனிய நாளாக அமையும். அக்கம் பக்கத்தில் உரையாடும் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் துணிச்சலுடன் சில பணிகளை எதிர்கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும். ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.