கன்னி ராசி அன்பர்களே,

இன்று காலையில் மன பதட்டத்துடன் காணப்படுவீர்கள். எதையும் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமைக்காக கடினமாக பாடுபடுவீர்கள் .விலை உயர்ந்த பொருட்களை வாங்க முயற்சி செய்வீர்கள் .பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வரக்கூடும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை உருவானாலும் மருத்துவ செலவுகள் வரக்கூடும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

இன்று  சுயதொழில் புரிபவர்களுக்கு லாபம் இருக்கும். முயற்சிகளால் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். இந்த நாள் நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து வெற்றி பெற முடியும். இன்று பெண்களுக்கு முன் கோபம் வெளிப்படும். சில விஷயங்கள் முடிவெடுக்கும் போது சிந்தித்து செயலாற்றுவது நல்லது. யாரையும் குறை சொல்ல வேண்டாம்.

இன்று மாணவர்கள் சுறுசுறுப்பாக நடந்து கொள்வீர்கள். முன் பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான்  வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் .நல்லதே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் மஞ்சள்