சிம்ம ராசி அன்பர்களே,

இன்று தன வரவு கூடும் நாள் என்று சொல்ல முடியும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் சூழல் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும். இருப்பதை வைத்து திட்டம் தீட்டி செயல்படுங்கள். பெரிய அளவில் வெளியில் கடன் வாங்க வேண்டாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கனவுகளால் தொல்லை கொஞ்சம் ஏற்படக்கூடும். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழல் கொஞ்சம் உருவாகும். இன்று எந்த ஒரு பணியையும் கவனமாக மேற்கொள்வது நல்லது. வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். லாபம் சீராக கிடைக்கும். எதிர்ப்புகள் குறைந்து விடும். முயற்சியினால் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களுக்கு இன்று ஆழ்ந்த உறக்கம் இருக்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

சுயதொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மன அமைதி அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு தைரியம் மேலோங்கும். மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். கல்விக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்