கடக ராசி அன்பர்களே,

இன்று கடன் சுமை எல்லாம் குறைய ஆரம்பிக்கும். கடனில்  ஒரு பகுதி அடைபடும். நீண்ட நாளைய கனவுகள் நனவாகும். நீடித்த நோயிலிருந்து இன்று விடுபடுவீர்கள். திடீர் பண வரவு சந்தோஷத்தைக் கொடுக்கும் .தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். சிலருக்கு வீடு மாற்றம் நாடு மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும் .எதிர்பாராத சில விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

இன்று தைரியமாக செயல்பட்டு வெற்றி பெறும் சூழல் இருக்கிறது. உத்தியோகம் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் .ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். பணிகளை விரைவாக நீங்கள் செய்து முடிப்பது நல்லது. திறமையால் வெற்றி பெற முடியும். நண்பர்களால் நல்லது நடக்கும்.

இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். எல்லோரையும் மதிக்க கற்றுக் கொள்வீர்கள். பெண்கள் இல்லத்தை தூய்மையாக வைத்துக் கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  : மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  இரண்டு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்