மிதுன ராசி அன்பர்களே,

இன்று நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து வெற்றி பெறும் நாளாக இருக்கும். கண்டிப்பாக தொட்டது துலங்கும். வரவு ஓரளவு திருப்தியை ஏற்படுத்திக் கொடுக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களை சந்திப்பீர்கள் .குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழுங்கள். காரியங்களை கனக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களால் தேவையற்ற விஷயங்களில் சிக்க வேண்டாம். இளைய சகோதரத்திடம் கவனமாக பேசுங்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. எந்த ஒரு பணியிலும் கவனமாக இருங்கள்.

இன்று முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். தைரியமாக செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும். திறமையால் முன்னேறி செல்வீர்கள். வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள்.. திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள் .

பெண்களுக்கு இன்று எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். பாராட்டுக்கள் பெரும் நாள்  என்று சொல்லலாம்.  இன்று மாணவர்கள் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகரிக்கும். நன்றாக படிப்பது முக்கியம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் .நல்லதே நடக்கும் .அ

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்