வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அப்படி மலைப்பகுதியான நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை நிலவி வருகிறது.

இந்த மழையினால் ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. மேலும் உதகை மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட மலை பாதிப்புகளை பகிர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்

இலவச எண் : 1077

தொலைபேசி எண் : 0423-2450034 , 0423-2450035