மங்களூருவின் உள்ளால் பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, சாலையின் வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வேகம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், பைக் மோதிய உடனே மின் கம்பம் பலமாக அதிர்ந்துள்ளது. பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
मंगलूरु के उल्लाल इलाके से तेज़ रफ्तार का खतरनाक नज़ारा सामने आया है, तेज गति से आ रही एक मोटरसाइकिल अचानक नियंत्रण खो बैठी और सीधे सड़क किनारे लगे बिजली के खंभे से जा टकराई।#Mangalore #Ullal #RoadAccident #Speeding #ViralVideo pic.twitter.com/rOnPQKIaoB
— NBT Hindi News (@NavbharatTimes) February 17, 2026
“>
அதிவேகமாக பைக் ஓட்டியதே இந்த விபத்திற்கு முதன்மையான காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து உள்ளால் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
