தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன்னுடைய பேச்சாளும், நடத்தையாலும் காமெடியாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் போட்டியாளர்களை எந்த விதத்திலும் முகம் சுளிக்க வைக்காமல் வடிவேலு போன்று தன்னை தானே கிண்டல் அடித்துக் கொண்டு அடுத்தவர்களின் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இவர் அதிகமான சம்பளம் பெறும் தொலைக்காட்சி தொகுப்பாளியாக பார்க்கப்படுகிறார் .

இவர் தனக்கு சொந்தமான youtube சேனல் ஒன்று தொடங்கி அதில் பல வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமாக வருமானமும் பெற்று வருகிறார். இவருக்கு 2016 ஆம் வருடம் திருமணம் நடந்தது .2022 ஆம் வருடம் பிரியங்காவுக்கும் அவருடைய கணவர் பிரவீன் குமார் விவகாரத்தை செய்து பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியங்கா பிரபல நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.