தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (43). சம்பவம் நடந்த அன்று ராணி தனது கணவருடன் திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அவர்கள் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அங்கிருந்து கிளம்பும்போது தான் வைத்திருந்த செல்போனை காணாமல் போனதை ராணி அறிந்தார். இதுகுறித்து ராணி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ராணி அமர்ந்திருந்த டேபிள் மீது வைத்திருந்த செல் போனை ஒரு நபர் எடுத்தது தெரிய வந்தது. அவர் யார் என விசாரித்த போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(27) என தெரிந்தது. எனவே போலீசார் கருப்பசாமியை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை மீட்டனர்.
