கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சம்பவ நாளில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பைக்கின் சீட்டுக்கடியில் ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப் போன அருண் உடனடியாக பைக்கை நிறுத்தி கீழே இறங்கினார்.

அவர் தன்னுடைய பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினர் தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சீட்டை அப்புறப்படுத்திய நிலையில் சில நிமிடம் போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி பத்திரமாக பிடித்தனர்.

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.