தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அசின். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பலர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை அசின் கடந்த 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் நடிகை அசின் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அசின் அறிமுகமானார். 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது