கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பக்கிரவ்வா (40) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த 15ஆம் தேதி அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பாத நிலையில் திடீரென அவருடைய உடல் ஹிரேகேரூர் அரசு மருத்துவமனையில் இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி உறவினர்கள் அங்கு சென்ற நிலையில் பெண்ணின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர் யாரோ அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற மர்ம நபரை  வலைவீசி தேடி வருகின்றனர்.