சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, ராஜேஸ்வரி பாரிமுனையில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்பத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கடந்த 8ஆம் தேதி தாயார் வீடு உள்ள சைதாப்பேட்டைக்கு திரும்பி வந்தார்.
அங்கு தங்கியிருந்தபோது, மன உளைச்சலின் காரணமாக அவர் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
