தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவினரின் பேச்சை வெட்டியும் ஒட்டியும் எடிட் செய்யும் அண்ணாமலை திரைப்பட எடிட்டர் வேலைக்கு தகுதியானவர். திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் முழு பேச்சும் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அண்ணாமலை வெட்டி ஒட்டி வீடியோ வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திமுக அரசை குறை சொல்வதற்கு எதுவும் இல்லாததால் திமுகவினரின் பேச்சை வெட்டி ஒட்டி பாஜகவை வளர்த்து வருகிறார் அண்ணாமலை. டி.ஆர் பாலுவின் வீடியோவை கட் அண்ட் பேஸ்ட் செய்து மலிவான அரசியலில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார் என்றும், இது போன்ற அநாகரிகமான போக்கை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.