வங்கதேசத்தில் உள்ள பிராக் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மின்தூக்கி கோளாறு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பயன்படுத்தும் மின்தூக்கி, எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வழக்கத்தை விட மிக அதிவேகமாக இயங்கியது.

இதில் பயணித்த மாணவர்கள் நிலைதடுமாறி, அச்சத்தில் அலறத் தொடங்கினர். சிலர் வேகத்தைக் கண்டு கீழே விழாமல் இருக்கப் போராடிய நிலையில், மற்றவர்கள் ஆபத்தான முறையில் அதிலிருந்து குதிக்க முயன்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

View this post on Instagram

 

A post shared by Memes | Quotes | Fun 🤣 (@theschooltrolls)

“>

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். பலர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற இயந்திரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதே சமயம், சிலர் இந்த அதிவேக ஓட்டத்தை ‘ரோலர் கோஸ்டர்’ மற்றும் வீடியோ கேம்களுடன் ஒப்பிட்டு நகைச்சுவையான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விபத்து குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.